பத்திகைக்கான செய்திக் குறிப்பு

● தாயகமெங்கும், கல்வித்துறையின் வீழ்ச்சியை கட்டுக்குள் கொண்டுவரவும், வறிய குடும்பங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும்கூடிய செயற்திட்டங்கள்.
● நகரங்களை நோக்கிய குடிசன நகர்வினால் கிராமங்கள் பறிபோகாமலிருக்க, முன்பள்ளிக் கல்வியினை தொலைதூரக் கிராமங்கள்வரை விரிவாக்கி வளப்படுத்தும் நோக்குடனான திட்டங்கள்.
● வறிய மக்கள் அதிகம் வாழும் கிராமங்களில் முன்பள்ளிகளை உருவாக்கி, பராமரித்து, ஆசிரியைகளிற்கு ஊக்குவிப்புத் தொகை வழங்கி, கற்றல் மற்றும் கற்பித்தல் உபகரணங்கள் வழங்கி, சத்துணவு வழங்கும் செயற்பாடுகள்.
● மாணவ சமூகம் திசைமாறிப் பயணிப்பதை தடுக்கவும், கல்வியறிவு மட்டத்தினை வளர்க்கவும், கிராமப்புறங்களில் நடாத்தப்படும் மாலைநேர வகுப்புகள்.
● நலிந்த பொருளாதார நிலை காரணமாக, பல்கலைகழகக் கல்வியினை தொடரக் கஷ்டப்படும் மாணவர்களுக்கு மாதாந்த உதவி வழங்கும் செயற்பாடுகள்.
● பண்பாட்டையும், சமய ஒழுக்கநெறிகளையும் பேணும் ஆரோக்கியமான சமூகமாக மாறும் நோக்கில், அறநெறிவகுப்புகள் உருவாக்கப்பட்டு, உதவிகள் வழங்கப்பட்டு, ஆசிரியைகளுக்கு ஊக்குவிப்புகள் வழங்கும் திட்டங்கள்.
● முன்னாள் போராளிகள், மறைந்த போராளிகள், மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்கள் மற்றும் பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் மேம்பாட்டிற்கான பொருளாதார உதவிகள்.
● சமூகப் பொருளாதார மேம்பாட்டில் பங்களிப்பினை வழங்கக்கூடிய வகையிலான பண்ணைகளின் உருவாக்கம்.
● கிராம மட்ட சமூக அமைப்புகளால் முன்வைக்கப்படும் கோரிக்கைகளை ஆய்வுக்குட்படுத்தி, தேவையான நிதி உதவிகளைப் பெற்று, அவற்றை நிறைவேற்றிக் கொடுக்கும் நடைமுறைகள்.
● செயற்திட்டங்கள் யாவும் வினைத்திறன்மிக்கதாக, நீண்டகாலப் பயன்கொண்டவையாக முன்னெடுக்கப்பட ஆதாரமாக அமைந்த தாயக உறவுகளின் அர்ப்பணிப்பு, பங்களிப்பு, ஆலோசனைகள்.